சட்டவிரோதமாக பயன்படுத்தம் ஆயுதங்களை பொதுமக்கள் கையளிப்பதற்கான கால எல்லையைஅரசாங்கம் விதித்திருந்தது.
இதற்கமைய குறித்த நிகழ்வானது வெற்றியளித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்கஅமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்விற்கு பொதுமக்களிடம் இருந்து பூரண ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2016 ஏப்ரல் 25ம் திகதி தொடக்கம் மே மாதம் 6ம் திகதி வரை குறித்தசட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தல்விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த காலப்பகுதிகளுக்குள் ஆயுதங்களை ஒப்படைக்க தவறுபவர்களை கைதுசெய்வது தொடர்பான நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அரச புலனாய்வு பிரிவு மற்றும் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமையபொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சுற்றிவளைப்பைமேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

