அங்கு சென்ற அவர் முதலில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் மீள்குடியேற்றம் தொடர்பிலும், வட மாகாணத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் பின்னர், யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் அவர் சந்தித்துள்ளார்.
இதேவேளை, சுவீடன் வௌிவிவகார அமைச்சர் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவையும் சந்தித்து வடக்கின் அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

