இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புல்பே பகுதிக்கும் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை பகுதிக்குமே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதிகளில் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதிவாகும் பட்சத்திலேயே மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அனர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

