இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் கொண்டிருக்கும் ஈடுபாட்டை சுவீடன் அரசாங்கம் வரவேற்றுள்ளது
இலங்கை வந்துள்ள அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கிரட் வோல்ஸ்ரோம் இந்தக்கருத்தை இன்று வெளியிட்டுள்ளார்
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் சந்திப்பை நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இலங்கை, சர்வதேசத்துடன் ஆரோக்கியமான ஈடுபாட்டை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடன் சுவீடன் நீண்டதூர உறவை கொண்டிருப்பதாகவும் மார்கிரட் தெரிவித்துள்ளார்.

