வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் எதிர்வரும் வியாழக்கிழமையன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது படையினரால் விடுவிக்கப்பட வேண்டிய பொதுமக்களின் நிலங்கள் தொடர்பில் முதலமைச்சர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் படையினர் பொதுமக்களின் நிலங்களை மீள வழங்கும் போது அவற்றைபயன்படுத்தக்கூடிய வகையில் செப்பனிட்டு வழங்கவேண்டும் என்று விக்னேஸ்வரன் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை படையினரால் நிலங்கள் மீளக் கையளிக்கப்படும் போது சேதமடைந்த வீடுகளுக்காக 250.000 ரூபாவும், சேதமடைந்த தொழில் நிறுவனங்களுக்காக 500,000 ரூபாவும்வழங்கப்பட வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

