Headlines
Admin-message

சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் இரண்டு இலங்கையர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளது

Published by tamilkurall on  | 

யாழ்ப்பாணம்-சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் வெளிநாட்டிலுள்ள இரண்டு இலங்கையர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பிரதான சந்தேகநபர்களையும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
.அத்துடன் இவர்களை உடனடியாக கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவர் சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்ததுடன் இந்த சம்பவம் குறித்து பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top