ஹெரோயின் போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட பாக்கிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டாரில் இருந்தே குறித்த போதைப்பொருளை கடத்தி வந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபரிடம் இருந்து சுமார் 87 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 8.7 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

