Headlines
Admin-message

மஹிந்தவின் நடவடிக்கைளை புலனாய்வு செய்த SIS உறுப்பினர் கைது

Published by tamilkurall on  | 


முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்சவின் பத்தரமுல்ல அலுவலகத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய நபர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவு எனப்படும் SIS இன் உறுப்பினர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்க புலனாய்வு பிரிவினால் பல்வேறு வேலைகளுக்காக இந்த உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் 100க்கும் அதிகமான சந்தர்ப்பங்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் உயர் மட்ட ஆலோசனைக்கமைய அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பங்களிப்புடன் மே தின கூட்டம் தொடர்பில் நேற்று முன் தினம் பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது ரேனுக பெரேரா தன்னை வருமாறு அழைத்ததாக கூறிக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்த குறித்த நபர், மஹிந்த ராஜபக்ச வருகை தந்த நேரத்தை தொலைப்பேசி ஊடாக வேறு ஒருவருக்கு கூறியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக இந்த நபர் பல நபர்களின் பெயர்களை கூறிக்கொண்டு அலுவலக பணிகளுக்கும் உதவி செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு முன்னர், மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது, முன்னாள் ஜனாதிபதி சென்றுவிட்டாரா என வினவியே குறித்த நபருக்கு அழைப்பொன்று கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த நபரை பாதுகாப்பு பிரிவினர் ஊடாக கைது செய்யப்பட்டு தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top