Headlines
Admin-message

வடகிழக்கு இணைந்த சமஷ்டி முறைக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு

Published by tamilkurall on  | 

இலங்கையில் தமிழ்த் தலைமைகளால் முன்வைக்கப்பட்டுவரும் சமஷ்டி முறையிலா அதிகார பகிர்வுக்கு தேசிய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. 
அக்கரைப்பற்று பிரதேசத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ எல் அதாவுலா தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரன தீர்மானம் பிரதானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் வட மாகாண சபையின் இந்த தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதுமா லெப்பை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனம் என்பதை மறந்து தமிழ் அரசியல் தலைமைகள் நடந்து கொள்வதாக தெரிவித்த அவர் அதிகாரப் பகிர்வில், தமிழர் தரப்பு முஸ்லிம்கள் தொடர்பாக தனித்து தீர்மானங்களை எடுப்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு இரு மாகாணங்களும் இணைக்கப்படுமாயின் சம அந்தஸ்துடையதாக தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அதேபோல் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அமையக் கூடியதாக மாகாண எல்லைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மான் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top