பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனை காணவில்லை என கடந்த 22ஆம் திகதி உறவினர்களால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பில் இருந்து தனது சித்தப்பாவின் வீட்டுக்கு கடந்த 20ஆம் திகதி விடுமுறையை களிப்பதற்காக சென்றிருந்தபோதே, குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே குறித்த சிறுவன் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

