வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வட மாகாண சபையினால் சேகரிக்கப்பட்ட நிதி தமிழக முதலமைச்சரின் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் தமிழகத்தில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழக மக்களுக்கு உதவும் வகையில், வட மாகாணசபையினால் பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதி சேகரிக்கப்பட்டது.
நிதி சேகரிக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், சேகரிக்கப்பட்ட 4 இலட்சத்து 94 ஆயிரத்து 912 ரூபாய் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி தமிழக முதலமைச்சரின் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார
எனினும் இந்த விடயம் தொடர்பான முழுமையான விபரங்களைத் வழங்குவதற்கு வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

