அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், சிறப்பு நடவடிக்கைக் கட்டளைப் பணியக தளபதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள, அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், சிறப்பு நடவடிக்கைக் கட்டளைப் பணியகத்தின் தளபதியான, ரியர் அட்மிரல் கொலின் கில்ரெய்ன், நேற்று இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், லெப்.கேணல் ரொபேட் ரொஸ் உள்ளிட்ட, நான்கு பேர் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும், கலந்து கொண்டது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் நெருக்கமடைந்திருப்பதுடன், இலங்கை கடற்படையினருக்கான பயிற்சிகளையும் அமெரிக்க கடற்படை வழங்க ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

