Headlines
Admin-message

இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள பொது இடங்களை மீட்டுத்தருமாறு சம்பந்தனிடம் கோரிக்கை

Published by tamilkurall on  | 

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலபகுதிகளில் உள்ளபொது இடங்கள் - பல ஏக்கர் நிலங்களைக் கொண்ட தனியார் காணிகள்தற்போதும்
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்றன. அவற்றை மீட்டு தரவேண்டும் முல்லைத் தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்கள்,எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளன.


ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மாங்குளம் நகரில் மாங்குளம்மகா வித்தியாலயத்துக்கு எதிரே அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தை மையப்படுத்திஇராணுவத்தினர் சிறு முகாம்களை அமைத்துள்ளனர்.

அதனால் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட காலம் முதல் கடந்த ஏழு வருடங்களாக தமது பொதுத் தேவைகளுக்குஇந்தக் கட்டடத்தை பாவிக்க முடியாத அவல நிலையில் மக்கள் உள்ளனர்.அவற்றைஇராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கவேண்டும்.
அதேவேளை, மாங்குளம் பிரதானஇராணுவ முகாமை அண்டியதாக உள்ள மத்திய வகுப்பைச் சேர்ந்த மக்களின் 30 ஏக்கரைக்கொண்ட காணிகளை இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளனர்.
அவற்றையும் விடுவித்துஉதவ வேண்டும் என மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எதிர்க்கட்சிதலைவர் சம்பந்தனிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஆலங்குளம் கிராமத்தைச்சேர்ந்த சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தமது பகுதியிலும் மீள்குடியமர்வின் பின்னர் அங்குள்ள சிறார்களின் முன்பள்ளிக் கட்டடத்திலும், பொதுநோக்கு மண்டபத்திலும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் என்று அவர் அந்தக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீள்குடியமர்த்தப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இராணுவத்தினரால்அவை இன்னமும் கையளிக்கப்படவில்லை. சிறார்களின் கல்வி வளர்ச்சியையும்பொதுமக்களின் தேவையைக் கருத்தில்கொண்டும் குறித்த கட்டடங்களைஇராணுவத்தினரிடமிருந்து விடுவித்து உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top