இலங்கை கடற்படையில் யோஷித ராஜபக்ஷவினால் மேற்கொண்ட முறையற்ற செயற்பாடுகள் தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பான நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
லெப்டினன் யோசித ராஜபக்சவின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்த கடற்படைத் தளபதியால் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர பதிலளித்தார்.
யோஷித ராஜபக்ஷ கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட விதம், மற்றும் வெளிநாடுகளுக்கு பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டமை தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

