அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தினை ஆரம்பித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தின் முதல் கட்டமாக சவூதி அரேபியாவிற்கு ஜனாதிபதி பராக் ஒபாமா விஜயம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தில் பராக் ஒபாமாவுடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஏஸ்டன் காடரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது சவூதி அரேபிய மன்னரை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரித்தானியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

