இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசாங்கத்தின் முடிவை கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு இரண்டு தடவை நிராகரித்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிகாலத்தில் 2014ஆம் ஆண்டு முதலாவது கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன், அந்த கடிதம் முதல் தடவையாக நிராகரிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாது முறையாக தமிழக அரசு குறித்த நபர்களை விடுதலை செய்யுமாறு கோரி மத்திய அரசாங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்த போதிலும் அதனையும் மத்திய அரசு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

