Headlines
Admin-message

கடன் அடிப்படையிலான வீடமைப்பை பெருந்தோட்ட பகுதிகளில் செயற்படுத்த திட்டம்

Published by tamilkurall on  | 

கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ள கடன் அடிப்படையிலான வீடமைப்பு திட்டம் பெருந்தோட்ட பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய  போதே அவர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் கிராமப்புற பகுதி மக்களுக்கு வீடமைப்பு அமைச்சின் மூலமாக கடன் உதவி பெற்றுக் கொடுக்கப்பட்டு வீடமைப்பு திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை பெருந்தோட்ட பகுதி மக்களுக்கும் பெற்றுக் கொடுக்க முடியுமா என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வினவியதற்கு, தான் அதனை வழங்க தயாராகவுள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் உறுதியளித்ததாகவும் வீ.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top