ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் காரொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று மாலை 6.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்டிருந்த மழையுடன் கூடிய வானிலையினால், கார் வழுக்குண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் வீழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மட்டக்களப்பு – பாசிக்குடா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த காரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் காரில் இரண்டு சிறுவர் அடங்கலாக ஐவர் பயணித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
மட்டக்களப்பிலிருந்து சுற்றுலா பயணம் சென்ற குடும்பமொன்றே இவ்வாறு விபத்தை எதிர்நோக்கியுள்ளது.


