நிதி நடவடிக்கைகள் மற்றும் மத்திய வங்கி தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் போது தானும், பிரதமரும், நிதி அமைச்சரும் உள்ளடங்கும் வகையிலான குழுவொன்று உருவாக்கப்பட்டு அதனூடாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டின் பின்னர் நேற்றைய தினம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இவ்வாறான தீர்மானங்களை கலந்துரையாடல்களின் ஊடாக எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மக்களுக்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான வரி அறவீட்டு முறைக்கு தான் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

