Headlines
Admin-message

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றமொன்று – மாற்றத்தின் பின்னர் எதிர்ப்பு எழுந்துள்ளதாக தகவல்.

Published by tamilkurall on  | 

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் ஊடக இணைப்பாளராக கிரிக்கெட் வர்ணணையாளர் சந்திரஷான் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடக பிரிவில் இந்த வருடத்தில் ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது மாற்றம் இதுவாக கருதப்படுகின்றது.
இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடகப் பிரிவினது ஆலோசகராக சந்திரஷான் பெரேராவின் மனைவி ராய் ரெமன்ட் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடகப் பிரிவிலுள்ள இரண்டு பிரதான நபர்களான வஜிர தஸநாயக்க மற்றும் ரஞ்ஜித் பெர்ணான்டோ ஆகியோர் இருக்கின்ற நிலையிலேயே ஆலோசகர் மற்றும் இணைப்பாளர் பதவிகளுக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்களினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்குள் பாரிய எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top