Headlines
Admin-message

முச்சக்கரவண்டியில் பலவந்தமாக அழைத்து செல்ல முயற்சித்த பெண் தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளார் (CCTV படம் இணைப்பு)

Published by tamilkurall on  | 

பலவந்தமாக முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணொருவர், குறித்த முச்சக்கரவண்டியிலிருந்து பாய்ந்து தப்பித்துள்ள செய்தியொன்று காலி பகுதியில் பதிவாகியுள்ளது.
காலி – மாபலகம கோனலகொட பகுதியில் முச்சக்கரவண்டியொன்றில் ஏறிய பெண்ணை, அவர் இறங்கும் இடத்தில் நிறுத்தாது பலவந்தமாக முச்சக்கரவண்டியின் சாரதி அழைத்து சென்றுள்ளார்.
தான் இறங்கும் இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் வரை இந்த முச்சக்கரவண்டி நிறுத்தாது பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து குறித்த பெண் முச்சக்கரவண்டியிலிருந்து பாய்ந்த தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ள விதம் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரையே இவ்வாறு கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியிலிருந்து பாய்ந்தமையை அடுத்து குறித்த பெண் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீ.சீ.டி.வி காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top