Headlines
Admin-message

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் சிறையில்

Published by tamilkurall on  | 

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவிருந்த 9 பேர் நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும், பெண்ணொருவரும், இரண்டு ஆண் பிள்ளைகளும், பெண் குழந்தையொன்றும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்றொழிலில் ஈடுபடும் போர்வையிலேயே இவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க தயாராகயிருந்தார்கள் எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்வோர் தொடர்பில் கடற்படையினர் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் தொடரபுடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top