Headlines
Admin-message

தனிநாட்டு கோரிக்கைக்கு பிரித்தானிய எதிர்க்கட்சி ஆதரவு

Published by tamilkurall on  | 

இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு சுயேட்சை ஆட்சியை பெற்றுக் கொள்வதற்காக அவர்களுக்கு தனி நாடொன்றை ஸ்தாபிக்கும் யோசனைக்கு பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அந்த கட்சியின் தலைவர் ஜேரம் கோர்பின் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற தமிழ் போ லேபர் அமைப்பின் மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுயேட்சை ஆட்சிக்கான தமிழர்களின் உரிமையை தொழிலாளர் கட்சி ஏற்றுக் கொள்வதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை இரண்டாக பிளவுப்படுத்த வேண்டும் என தொழிலாளர் கட்சியின் தலைவர் தெரிவித்த கருத்துக்கு அங்கிருந்த புலம்பெயர் தமிழர்கள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டிற்கு தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துப்படுத்தி 26 உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாட்டில் தொழிலாளர் கட்சியின் உத்தியோகப்பற்றற்ற வெளிவிவகார செயலாளர் ஹிலரி கான், சியோடிஹான் தெத்டோனா, சூனா உடுனா, ஜோன் மெக்டோனல் மற்றும் கெவின் சாஸ் அகியோர் பிரசன்னமாகியுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top