Headlines
Admin-message

ஆசிய பாதுகாப்பு கண்காட்சியில் ருவன் விஜேவர்தன (படம் இணைப்பு)

Published by tamilkurall on  | 

மலேஷியாவின் கோலாலம்பூரில் நடைபெறுகின்ற 15ஆவது பாதுகாப்பு சேவை ஆசிய கண்காட்சி மற்றும் சமாதானத்திற்கான பாதுகாப்பு, பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துப்படுத்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அங்கு சென்றுள்ளார்.
மலேஷிய பிரதமர் அப்துல் ரசாக்கின் அழைப்பின் பேரிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
15ஆவது பாதுகாப்பு சேவை ஆசிய கண்காட்சி மற்றும் சமாதானத்திற்கான பாதுகாப்பு, பாதுகாப்பு தொடர்பான மாநாட்டு மலேஷிய பிரதமரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாநாட்டின் போது மலேஷிய பாதுகாப்பு அமைச்சர் ஹிஷம்முதின் ஹுசைனுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இருதரப்பு பேச்சுவார்த்தையொன்றை நடாத்தியுள்ளார்.
இதன்போது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய விஜயம் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பிரதானி ஏயார் சீப் மார்ஷல் கோலித்த குணதிலக்கவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top