Headlines
Admin-message

மே மாதத்தில் இலங்கையர்களுக்கு வரும் சோதனை !!!

Published by tamilkurall on  | 

எதிர்வரும் மே மாதக் காலப்பகுதியில், காற்றின் வேகம் குறைந்து காணப்படும் என்றும் இதன் காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையான வெப்பத்துக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதம் முடியும் வரை, நாட்டில் ஈரப்பதன் காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தினாலேயே கடுமையான வெப்பம் காணப்படும் என்று குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், தற்போது நாட்டில் காணப்படும் வெப்பமான காலநிலை, மே மாதமளவில் குறைவாக இருக்கும் என்றும் ஆனால், குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மாத்திரம் வெப்பநிலையின் அளவு அதிகரிக்கும் என்றும், குறித்த திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (16) அநுராதபுரத்தில் 36.4 பாகை செல்சியஸாக இருந்த வெப்பநிலை, 37 பாகை செல்சியஸாக அதிகரிக்கும். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (17) 32 பாகை செல்சியஸாக வெப்பநிலை காணப்பட்டது.
இது, எதிர்வரும் காலத்தில் 34 பாகை செல்சியஸாக அதிகரிக்கவுள்ளது.
இதேபோல, இரத்தினபுரி – 34.9 பாகை செல்சியஸிருந்து 36க்கும், காலி – 32 பாகை செல்சியஸிலிருந்து 35க்கும், யாழ்ப்பாணம் – 35 பாகை செல்சியஸிருந்து 36க்கும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top