Headlines
Admin-message

ஏழு இந்தியர்களும் கொழும்பு சிறைக்கு மாற்றம்

Published by tamilkurall on  | 

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகள் ஏழ்வரையும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் எட்டு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் மிரிஹான விஷேட தடுப்பு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நேற்று, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர். 

இந்தநிலையில் மிரிஹான விஷேட தடுப்பு நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமையால் ஏனைய சந்தேகநபர்கள் ஏழ்வரையும் கொழும்பு விளக்கமறியில் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரினர். 

இதன்படி கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top