2012 ஆம் ஆண்டு மாத்தளை நிக்களோய பகுதியில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதற்கட்ட வீடமைப்புத் திட்டமொன்று நாளை 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
மாத்தளை விகாரகமவில் இடம்பெறும் மேற்படி வீடமைப்புத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

