நல்லெண்ண விஜயமாகவே இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கப்பலின் தலைவரான கெப்டன் லோரன்ட் மாசாட், இலங்கையின் மேற்குக்கரை கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடற்படை தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதேவேளை பிரான்ஸின் கப்பல் எதிர்வரும் 5ம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில், பிரான்ஸ் கப்பல் இலங்கை கடற்படையுடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
advertisement

