Headlines
Admin-message

500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் பிற்போடப்பட்டது!

Published by tamilkurall on  | 

நாளை 20ம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்த பெருந்தோட்ட பகுதிகளுக்கான 500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டு வரும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்களில், (3021 பேரில்) 820 பேர் பேருக்கு இன்னும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. 

இவர்களில் முதல் கட்டமாக 500 பேருக்கு எதிர்வரும் 27ம் திகதி நியமனம் வழங்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 

இந்த நடவடிக்கை நாளை 20ம் திகதி மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. 

எனினும் சித்திரை புதுவருட காலப்பகுதியில் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் கடிதம் கிடைப்பதில் தாமதம் அதிகமாக காணப்படும் என்ற காரணத்தினால் நியமன திகதியை மாற்றுமாறு பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top