வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலுக்கு சென்ற இரு குடும்பஸ்தர்கள் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டு உள்ளனர். வடமராட்சி கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) ஆகிய இருவருமே அவ்வாறு கடத்தப்பட்டு உள்ளனர்.
இவர்கள் இருவரும் கடற்தொழில் செய்து வருவதாகவும் நேற்று புதன்கிழமை தொழில் நடவடிக்கைக்காக கடற்கரைக்கு சென்ற வேளையிலையே “டொல்பின் ” ரக வாகனத்தில் வந்தவர்களால் கடத்தப்பட்டு உள்ளனர்.
இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் அமைப்புடன் எவ்வித தொடர்புகளும் அற்றவர்கள் என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், இன்று காலை வரை அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

