Headlines
Admin-message

அமைச்சர்கள்- முதலமைச்சர்களை இன்று சந்திக்கிறார் மைத்திரி

Published by HASSAN on  | 



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (திங்கட்கிழமை) மாலை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் முனனெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் நாட்டின் அரசியல் சூழல் குறித்து ஆராயப்படவுள்ளன. எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது பாரிய பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் ஜனாதிபதி கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இன்றைய தினம் இச்சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டாரென தெரிவிக்கப்படுகிறது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top