ஜப்பானிய கார் நிறுவனமான மிட்சுபிஸி நிறுவனத்தின் அலுவலகங்களில் அந்த நாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான கார்களில் எரிபொருட் செயற்திறன் தொடர்பான தகவல்களை பொய்ய்யாக காண்பித்ததாக கடந்த புதன் கிழமை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இந்த நிலையிலேயே நிறுவனத்தை ஜப்பான் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளதுடன் இது தொடர்பான துல்லியமற்ற தகவல்களின் அளவு குறித்து விரைவில் அறிக்கையை வெளியிடுவார்கள் எனவும் அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மிட்சுபிஸி நிறுவன பங்குகளை விற்பதற்கான அதிக கேள்வி எழுந்ததை அடுத்து நிறுவன பங்கு விலை 15 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
