Headlines
Admin-message

கோட்டாவை கைதுசெய்யாவிட்டால் போர் குற்றவாளிகளை ஊக்குவிப்பதற்கு சமன் ஒபாமாவுக்கு எச்சரிக்கை

Published by tamilkurall on  | 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்னற நிலையில் அந்த நாட்டு இரு தமிழ் அமைப்புக்களால் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பபோர் ஒபாமா (Tamils for Obama) மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம் (American Tamil Forum) என்ற இரு அமைப்புக்களுமே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த அமைப்புக்கள் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்தாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை போர் குற்றச்சாட்டுக்களின் முக்கிய நபராக கருதப்படும் ஒருவரை கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்யும் வாய்ப்பை அமெரிக்கா தவறவிடக்கூடாது எனவும் அந்த குறிப்பிட்டுள்ள அமைப்புக்கள் அவ்வாறு தவறவிடப்படுமானால் ஏனைய போர் குற்றவாளிகளை  ஊக்குவிப்பதாக அது அமையும் என்வும் சுட்டிக்காட்டியுள்ளனகர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top