திருகோணமலை, சீனக்குடா இராணுவப் பயிற்சி முகாமில் இருந்த பத்து இராணுவ வீரர்கள், நேற்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளிவிக்கொட்டுக்கு இலக்காகிய இராணுவத்தினர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த இராணுவ வீரர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் இரு இராணுவ வீரர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கிண்ணியா பிரதேச மாவட்ட வைத்திய அதிகாரி எச்.எம்.சமீம் தெரிவித்துள்ளார்.

