Headlines
Admin-message

சிவகரனை இன்று விடுவிப்பதாக விசாரணைப் பிரிவு உறுதியளித்தது; சார்ள்ஸ் நிர்மலநாதன்

Published by tamilkurall on  | 

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சந்தித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் வவுனியா பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிவகரனை சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி இன்று வியாழக்கிழமை சென்று சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் இவரது கைது குறித்த விளக்கத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் வினவியபோதிலும், தெளிவாக பதில் ஒன்றை வழங்கவில்லை என்று சார்ள்ஸ் எம்.பி  தெரிவித்தார்.
எனினும் இன்றைய தினம் சிவகரனை பிணையில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணைப் பிரிவினர் உறுதியளித்துள்ளனர்.
மன்னார் பிரதான வீதியில் வைத்து வி.எஸ்.சிவகரன் நேற்று புதன் கிழமை 2 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top