Headlines
Admin-message

நிவாரணம் வழங்குவதற்கு தன் பெயரை சூட ஆசைப்படும் பிரதி அமைச்சர்!

Published by tamilkurall on  | 


நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ ஜயவர்த்தன புறக்கோட்டேயைச் சேர்ந்த 7000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு கோட்டே நகரசபை, பிரதேச செயலகம் மற்றும் மிரிஹான பொலிஸார் ஆகியோர் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த மக்களுக்காக சமைத்த உணவுகள், ஆகாரங்கள், குடிபானவகைகள், மருந்துகள் மற்றும் தற்காலிக கூடாரங்கள் என்பன வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டே நகரசபையின் நகராதிபதி ஜனக ரணவக மற்றும் நகரசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட நிதி ஒதுக்கில் குறித்த நிவாரணங்கள் வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் வழங்குவதற்கு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த விடயங்கள் கோட்டே நகரசபையின் நகராதிபதியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நிலையில் வெளியுறவு பிரதி அமைச்சர் ஹர்ஸ டீ சில்வா தனது பெயரைப் பதிவு செய்வதற்கு முனைவதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் நடவடிக்கை பெரும்பாலும் முடிவடையும் தறுவாயில் பிரதி அமைச்சர் இரண்டு லொறிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த லொறிகளை நகரசபை உறுப்பினர்கள் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top