புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை இந்திய பாதுகாப்பு இணையமைச்சர் ராவோ இந்திரஜித் சிங் உள்ளிட்ட பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று சந்திபொன்று நடைபெறவுள்ளது.
இதன் போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான பல முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நாளை நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதுடன், சாஞ்சி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனகாரிக தர்மபாலவின் சிலை ஒன்றையும் திறந்து வைக்கவுள்ளார்.

