Headlines
Admin-message

மஹிந்த ஆட்சிக் காலத்தில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளன

Published by tamilkurall on  | 


கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்ட 27 சர்வதேச பிரகடனங்களை மஹிந்த அரசாங்கம் மீறியுள்ளது.
இவ்வாறு சர்வதேச ரீதியாக இணக்கப்பாடுகள் மீறப்பட்டதனால் இலங்கை கடந்த காலங்களில் பாரியளவில் பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியிலான பிரச்சினைகளை எதிர்நோக்கியது.
சில சர்வதேச பிரகடனங்கள் குறித்து எவ்வித கவனமும் செலுத்தாது ஏதேச்சாதிகார போக்கில் பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளன.
மனித உரிமை பாதுகாப்பு ஊடக சுதந்திரம் போன்றன தொடர்பில் சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு காணப்பட்ட நெருக்கடிகளை மாற்றியமைத்து உலக நாடுகளுடன் இணைந்து செயற்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top