நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் எரிபொருள் பிரிவு தலைவர் பந்துல சமன் குமார இது பற்றி அறிவித்துள்ளார்.
கொழும்பு தர்மவிஜய அமைப்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
95 ஒக்டேன் ரக பெற்றோல் இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக காணப்படுகின்றது.
7ம் திகதி எரிபொருள் கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் 7ம் திகதிக்கு முன்னதாக இந்தக் கப்பல் வராவிட்டால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.
புத்தாண்டு காலத்தில் அதிக எரிபொருள் நுகர்வு, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்தமை, மசகு எண்ணெய்கள் உரிய நேரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படாமை போன்ற காரணிகளே இதற்கான காரணமாகும்.
இதேவேளை, இலங்கையில் பாரியளவில் எரிபொருள் மாபீயாவொன்று செயற்பட்டு வருகின்றது.
எரிபொருள் கூட்டுத்தாபனத் தலைவர் வழமையான ஒழுங்கு விதிகளுக்கு புறம்பான வகையில் தனக்கு விருப்பமானவர்களை எரிபொருள் விநியோகஸ்தர்களாக நியமித்துள்ளார்.
தவைரின் தேவைக்கு ஏற்ப கொள்வனவு கட்டளையிடப்பட்ட எரிபொருள் தொகை இன்னமும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இனதனால் நாட்டில் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் பொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கா சுதந்திர தொழிற் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கு பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக பதில் எதனையும் அளிக்கவில்லை.

